கச்சபேஸ்வரர் கோயில் தெப்போற்சவம் - பக்தர்கள் தரிசனம்
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாத தெப்ப உற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
உற்சவத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து சிறப்பு அலங்காரங்களுடன் கச்சபேஸ்வரர் சுந்தராம்பிகை அம்பாளுடன் தெப்பகுளத்தில் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.