வடசென்னை படத்தில் தவறாக சித்தரித்ததாக புகார்

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் படப்பிடிப்பு நடத்த மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-11-17 12:38 GMT
விளையாட்டை மையமாக கொண்டு சாம்பியன் என்ற படத்தை இயக்குநர் சுசீந்திரன் இயக்கி வருகிறார். இதற்காக காசிமேடு பகுதிக்கு அவர் படப்பிடிப்புக்கு சென்ற நிலையில் அதற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏற்கனவே இயக்குநர் வெற்றி மாறன் வடசென்னை மக்களை தவறாக சித்தரித்ததால் மீண்டும் படப்பிடிப்பு நடத்த அனுமதிக்க மாட்டோம் என அவர்கள் தெரிவித்தனர். ஆனால் அவர்களுடன் இயக்குநர் சுசீந்திரன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. 
Tags:    

மேலும் செய்திகள்