"நீதிமன்ற உத்தரவுப்படி உள்ளாட்சி தேர்தலை அறிவிக்காதது ஏன்?"

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி உள்ளாட்சி தேர்தலை அறிவிக்காதது ஏன் என்று சென்னை உயர் நீதிமன்றம், மாநில தேர்தல் ஆணையத்துக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

Update: 2018-11-09 02:18 GMT
உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த ஆண்டு நவம்பர் 17 ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்த உத்தரவை அமல்படுத்தாத மாநில தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசுக்கு எதிராக திமுக சார்பில் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதிகள் சத்திய நாராயணன், எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 1996ம் ஆண்டு வார்டு வரையறை அடிப்படையில்  தற்போது ஏன் தேர்தலை நடத்தக் கூடாது எனவும் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்ற உத்தரவை தடுப்பது எது எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.  இது குறித்து விளக்கமளிக்குமாறு தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை நவம்பர் 23ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்