பத்ம ஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் - அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் பழனிசாமி
திருச்செந்தூரில் பத்ம ஸ்ரீ சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டுகிறார்.;
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் கடந்தாண்டு நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கல்வி, விளையாட்டு, செய்தி துறையில் சிறப்பாக பணியாற்றிய
பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்றும்இதற்கான பணி 2018-19ஆம் ஆண்டு துவங்கப்படும் என்றும் அறிவித்தார். அதன்படி மணிமண்டபம் அமைக்க 1.34 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஆணை வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து மணிமண்டபம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா, திருச்செந்தூரில் உள்ள சிவந்தி அகாடமி வளாகத்தில் இன்று நடைபெறுகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டுகிறார். அதேநேரத்தில் திருச்செந்தூரில் நடைபெறும் விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆட்சியர் சந்தீப் நந்தூரி, நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்.