கபாலீஸ்வரர் கோயில் சிலை விவகாரம் : அறநிலையத்துறை கூடுதல் ஆணையரிடம் விசாரணை

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் சிலை விவகாரம் தொடர்பாக அறநிலையத்துறை கூடுதல் ஆணையரிடம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

Update: 2018-10-13 11:35 GMT
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஆய்வு நடத்தினர். சுமார் 3 மணி நேரம் நடந்த ஆய்வில், மயில், ராகு, கேது உள்ளிட்ட 3 சிலைகள் மாற்றப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகளிடம், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சென்னை வியாசர்பாடியில் உள்ள திருமகள் இல்லத்தில், சிறிது நேரம் விசாரணை நடந்தது. முதற்கட்ட விசாரணையில் பல முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாகவும், மேலும் விசாரணையை தீவிரப்படுத்த உள்ளதாகவும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்