சிலைக்கடத்தல் விவகாரம் : ஆஜராகாத 11 பேருக்கு மீண்டும் சம்மன்

சிலைக்கடத்தல் விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜராகாத தொழில் அதிபர் கிரண்ராவ் உள்பட 11 பேருக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்படுகிறது.

Update: 2018-10-10 23:19 GMT
சென்னையில் தோண்டத் தோண்ட கிடைத்த சிலைகள் தொடர்பான சர்ச்சையில் விசாரணைக்காக கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்துக்கு வர 12 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதில் தொழில் அதிபர் கிரன் ராவின் பணியாளர் நரேன் என்பவர் மட்டும் ஆஜரானார். அவரை ரகசிய இடத்தில் வைத்து ஐ.ஜி பொன் மாணிக்கவேல் மற்றும் டிஎஸ்பி சுந்தரம் உள்ளிட்ட போலீசார் விசாரணை நடத்தினர். 2 நாட்கள் நடைபெற்ற இந்த விசாரணை நிறைவுப் பெற்றது.விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில்  ஆஜராகாத 11 பேர் மீண்டும் ஆஜராக வேண்டும் என சம்மன் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த சம்மன் இன்று அவர்களுக்கு அனுப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்