மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி : வாகனங்கள் பிடிபட்டால், இனி பறிமுதல்

தமிழகத்தில் மணல் திருட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க, உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

Update: 2018-09-24 21:38 GMT
தமிழகத்தில் மணல் திருட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க, உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன்படி, மணல் கொள்ளையின் போது பிடிபடும் எந்த வாகனமாக இருந்தாலும், அதனை  பறிமுதல் செய்ய தமிழக அரசுக்கு, நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர். மகாலிங்கம் என்பவர் தொடர்ந்த பொது நல வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் சதீஷ்குமார் இருவரும்  இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்தனர். மாட்டு வண்டிகள் பிடிபடும் போது, மாடுகளை மட்டும் உரிமையாளர்களிடம் ஒப்படைத்து விட்டு, வண்டியை பறிமுதல் செய்ய உத்தரவிட்டனர்.  இந்த உத்தரவை, உள்துறை செயலாளர், அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் பின்பற்ற வேண்டும் என்றும் நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்