மதுரை பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக ஜல்லிக்கட்டு சிலை...

மதுரையின் தனி சிறப்பு மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக, ஆரப்பாளையம் ரவுண்டானாவில் ஜல்லிக்கட்டு சிலை வைக்கப்பட்டு உள்ளது.

Update: 2018-09-14 06:51 GMT
* தமிழர் பண்பாடு, கலாச்சாரம், ஆன்மீகம் ஆகியவற்றில் மதுரைக்கு என தனியான சில பாரம்பரியமும், சிறப்பும் உள்ளது. அந்த வகையில் ஒன்று தான் ஜல்லிக்கட்டு. இந்த வீர விளையாட்டுக்கு முதன்மை மாவட்டமாக இருக்கும் மதுரையின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில், ஜல்லிக்கட்டு சிலை ஆரப்பாளையம் ரவுண்டானாவில், மாநகராட்சி அமைத்துள்ளது. ஜல்லிக்கட்டு காளையை ஒரு வீரன் தழுவுது போல  உள்ள இந்த சிலை ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. 

* வீரத்தை பறைசாற்றும் வகையில் இந்த சிலையின், அமைப்பு இல்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி, மீனாட்சி அம்மன் தேர் ஆகியவை சிலையாக பழங்காநத்தம், பாத்திமா கல்லூரி, செல்லூர் ரவுண்டானா மற்றும் திருபரங்குன்றம் பகுதியில் விரைவில் நிறுவப்பட உள்ள நிலையில், அவற்றின் பாராம்பரிய பெருமை பாதிக்காதவண்ணம் சிலைகள் கலை நுணுக்கத்துடன் அமைக்கப்பட வேண்டும் என மதுரைவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்