திருப்பதி பிரம்மோற்சவ நிகழ்ச்சி : சென்னையில் இருந்து திருப்பதிக்கு குடை ஊர்வலம்

சென்னை பூக்கடை தேவராஜ் முதலி தெருவில் உள்ள சென்ன கேசவ பெருமாள் கோவிலிலிருந்து திருப்பதி பிரம்மோற்சவ நிகழ்ச்சிக்காக திருக்குடைகள் எடுத்துச் செல்வது வழக்கம்.

Update: 2018-09-11 08:08 GMT
சென்னை பூக்கடை தேவராஜ் முதலி தெருவில் உள்ள சென்ன கேசவபெருமாள் கோவிலிலிருந்து திருப்பதி பிரம்மோற்சவ நிகழ்ச்சிக்காக திருக்குடைகள் எடுத்துச் செல்வது வழக்கம். பட்டுத் துணி, மூங்கில், ஜரிகை போன்ற பொருட்கள் மற்றும் வேலைப்பாடுகளுடன் ஏழு அடி விட்டம், ஏழு அடி உயரத்துடன் கூடிய குடைகளை தயாரித்து எடுத்துச் செல்வார்கள். அதன்படி, சென்னையில் இருந்து இந்த குடைகள் இன்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. இதற்கான பேரணியில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றுள்ளதால் வட சென்னை பகுதி முழுவதும் மக்கள் வெள்ளமாக காட்சியளிக்கிறது. பூக்கடை, என்எஸ்சி போஸ் சாலை, பைராகி மடம் வழியாக திருக்குடை ஊர்வலம் செல்கிறது. ஊர்வலத்தின் முக்கிய நிகழ்ச்சியான யானை கவுனியை குடை தாண்டும் நிகழ்வு இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்