விஷம் குடித்துவிட்டு ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்த பெண்

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பெண் ஒருவர் விஷம் குடித்து விட்டு கதறி அழுத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2018-09-10 20:11 GMT
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வாராந்திர குறைதீர்ப்பு கூட்டத்தில்,  ஆட்சியர் அன்புச்செல்வன், கலந்து கொண்டு மனுக்களை பெற்றார்.

அப்போது மனு கொடுப்பதற்காக வந்த இளமங்கலம் பகுதியை சேர்ந்த சிவசக்தி என்ற பெண் திடீரென கதறி அழுதவாறு மயங்கி விழுந்தார்.

சிவசக்தியை மீட்ட போலீசார், அவர் விஷம் குடித்திருப்பதை கண்டறிந்தனர். இதனையடுத்து உடனடியாக சிவசக்தியை அரசு மருத்துவமனைக்கு கூட்டி சென்றனர். போலீசார் நடத்திய விசாரணையில், சிவசக்தி கணவனை இழந்து நீண்ட நாட்களாக வறுமையில் வாடி வந்ததும், அப்பகுதியில் உள்ள சத்துணவு கூடத்தில் வேலை வேண்டி ஆட்சியரிடம் பலமுறை மனு கொடுத்ததும் தெரிய வந்தது. 

தனது கோரிக்கை ஏற்கப்படாததால், அவர் விஷம் குடித்ததும் தெரிய வந்தது. சிவசக்தி அழுததை பார்த்த அவரது இரண்டு மகன்களும் ஏன் தனது தாய் அழுகிறாள் என்பது அறியாமல் தவித்தனர். இது பார்ப்பவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
Tags:    

மேலும் செய்திகள்