உணவு கழிவுகளில் இருந்து சமையல் எரிவாயு, சேலம் குப்பைக்காரன் குழு இளைஞர்கள் அசத்தல்

உணவு கழிவுகளில் இருந்து சமையல் எரிவாயு உற்பத்தி செய்யும் கலனை கண்டுபிடித்து, சேலம் குப்பைக்காரன் குழு இளைஞர்கள் அசத்தியுள்ளனர்.

Update: 2018-08-29 05:26 GMT
சேலத்தை சேர்ந்த குப்பைக்காரன் குழு இளைஞர்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒன்று தான், வீட்டில் கிடைக்கும் உணவு மற்றும் காய்கறி கழிவுகளில் இருந்து சமையல் எரிவாயு உற்பத்தி செய்யும் இயந்திரத்தை இளைஞர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர். ஒரு கிலோ இயற்கை கழிவுகளை பயன்படுத்தி, 30 நிமிடங்களில் இருந்து 50 நிமிடம் வரை சமையல் செய்யலாம் என அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். இதனால் சமையல் எரிவாயு செலவு மிச்சமாவதுடன், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முடியும் என இளைஞர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்