திருவள்ளூரில் மணல் பதுக்கல் : பறிமுதல் செய்வதில் இருமாநில அதிகாரிகள் இடையே வாக்குவாதம்
பதிவு: ஆகஸ்ட் 21, 2018, 03:41 PM
மிட்ட கண்டிகை கிராமத்தில் தசரதன் என்பவரின் பண்ணை வீட்டில் 50 யூனிட் மணல் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தமிழக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அங்கு சென்ற தமிழக  வருவாய் துறையினர் மணலை பறிமுதல் செய்தனர். ஆந்திராவில் இருந்து மணல் கடத்தி வரப்பட்டதால் மணலை யார் கட்டுப்பாட்டில் எடுப்பது என்பது தொடர்பாக தமிழக வருவாய்துறையினருக்கும், ஆந்திர போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.