5 மலை மாவட்டங்களில் கனமழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நெல்லை, திண்டுக்கல், தேனி, கோவை உள்பட 5 மலை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2018-08-16 11:36 GMT
தென்மேற்கு பருவமழை வலுப்பெற்று கன்னியாகுமரி, நெல்லை மேற்குதொடர்ச்சி மலையையொட்டியுள்ள இடங்களில்  கனமழை பெய்கிறது. இந்நிலையில், நெல்லை, திண்டுக்கல், தேனி, கோவை, நீலகிரி  ஆகிய ஐந்து மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்யக் கூடும் என தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்த வரை மாலை அல்லது இரவு நேரத்தில் இடியுடன் கூடிய லேசான மழையை எதிர்பார்க்கலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்