India | Srilanka | இந்திய ராணுவம் செய்த பேருதவி.. தவித்த இலங்கைக்கு இந்தியா 4000 கோடி..!
டிட்வா புயல் பேரழிவிற்குப் பிறகு மீட்புப் பணிகளுக்காக இலங்கைக்கு இந்தியா 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரண உதவியை வழங்கவுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் சிறப்புத் தூதராக இலங்கை சென்றுள்ள ஜெய்சங்கர், இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹெராத்துடனான சந்திப்பின் போது இதை அறிவித்தார். அப்போது இலங்கையின் சமீபத்திய பொருளாதார சிக்கல்களின் போது இந்தியா ஆதரவு வழங்கியதை நினைவுகூர்ந்த அவர், டிட்வா புயல் கரையைக் கடந்தபோது இந்தியா ஆபரேஷன் சாகர் பந்துவின் கீழ் நிவாரணப் பணிகளை மேற்கொண்டதை சுட்டிக்காட்டினார். இலங்கையுடன் இந்தியா எப்போதும் உறுதியாக துணை நிற்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.