உத்தரகண்டில் வன நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதை அரசு வேடிக்கை பார்ப்பதாக என உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
உத்தரகண்டில் ஆக்கிரமிக்கப்பட்ட வன நிலங்களில் தற்போது நடைபெற்று வரும் அனைத்து கட்டுமான பணிகளையும் உடனடியாக நிறுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வனத்துறைக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது தொடர்பாக தாமாக முன்வந்து உச்சநீதிமன்றம் வழக்கு பதிவு செய்தது.
இதில், வனத்துறைக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்வதை உத்தரகண்ட் மாநில அரசும், வனத்துறையும் வேடிக்கை பார்க்கிறது என உச்சநீதிமன்றம் சாடியது.
குடியிருப்புகள் இல்லாத ஆக்கிரமிப்பு நிலங்களை உடனடியாக அரசு தனது கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்த விவகாரத்தில் உண்மையை அறியும் குழுவை அமைத்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அம்மாநில அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.