தஞ்சை பெரியகோயிலில் 32 இடங்களில் தகவல் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளது

தஞ்சை பெரியகோயில் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள வசதியாக 32 இடங்களில் தகவல் பலகை அமைக்கப்பட்டுள்ளது.

Update: 2018-08-05 07:11 GMT
மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய​ கோயில் கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி கோயிலை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த கோயிலின் வரலாற்றை பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில் 32 இடங்களில் கற்களால் ஆன தகவல் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. அதில் ஒவ்வொரு சந்நிதியில் உள்ள சாமிகள் குறித்த தகவல்கள் விரிவாக இடம் பெற்றுள்ளன. தமிழ், ஆங்கிலம், இந்தி  ஆகிய மூன்று மொழிகளில் விவரங்கள் எழுதப்பட்டுள்ளன.
Tags:    

மேலும் செய்திகள்