நவீன தொழில்நுட்பத்திற்கு மாறும் அரசுப் பள்ளிகள்...

தனியார் பள்ளிக்கு நிகராக அரசுப் பள்ளியிலும் மாணவர்களுக்கு பல்வேறு தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பை தற்போது பார்க்கலாம்...

Update: 2018-07-22 15:10 GMT
கடந்த நான்கு ஆண்டுகளில், தமிழகத்தில்  அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை 10 லட்சம் குறைந்து விட்டதாகவும், அதற்கான காரணங்களையும் கடந்த 17ஆம் தேதி  தந்தி தொலைக்காட்சியில் விரிவாக வெளியிட்டு இருந்தோம்...அத்தகைய குறைகளை சரிசெய்யும் பொருட்டு பள்ளி கல்வித்துறை பல்வேறு அதிரடி முயற்சிகளை கையில் எடுத்துள்ளது. அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரித்தல், கற்பித்தல், கற்றல் திறனை மேம்படுத்துதல், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாணவர்களுக்கு பாடங்களை கற்றுத் தருதல் உள்ளிட்ட முயற்சிகளை அரசு  எடுத்து வருகிறது...இதற்காக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது... அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட லேப்டாப்கள் மூலம் மாணவிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகிறது. தனியார் பல்கலைக்கழகம் வடிவமைத்த மென்பொருள் மூலம், இவற்றை கற்றுத் தரும் பணி நடைபெற்று வருகிறது...

சோதனை அடிப்படையில் சென்னை எழும்பூர் அரசு பள்ளியில் இந்த பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது... ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கருத்துகளை கேட்டறிந்த பிறகு இதனை மற்ற பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது..புதிய முறையில் பாடம் நடத்துவது, தங்களுக்கும் உற்சாகமாக இருக்கும் என்பதோடு, மாணவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என ஆசிரியர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். இந்த பயிற்சிகளால் தங்களின் திறன் மேம்படும் என்பதோடு, இனி வரும் காலங்களில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உபயோகமாக இருக்கும் என்கின்றனர் மாணவிகள்... 

Tags:    

மேலும் செய்திகள்