Ramanathapuram | பனிக்குட நீர் உடைந்து துடித்த தாய்.. கடைசி நேரத்தில் காப்பாற்றி டாக்டர்ஸ் சாதனை

Update: 2025-12-20 05:47 GMT

ஒரே பிரசவத்தில் பிறந்த குழந்தைகளை கங்காரு சிகிச்சையில் மருத்துவர்கள் பராமரித்து வருகின்றனர். முழு விவரங்களை பார்ப்போம்...

ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் - கங்காரு சிகிச்சையில் பராமரிப்பு

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் அறுவை சிகிச்சை மூலம் பிறந்த 3 குழந்தைகளை கங்காரு சிகிச்சையில் பராமரித்து அரசு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை சேர்ந்தவர் ராணி. 8மாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு பனிக்குட நீர் உடைந்ததால் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு மருத்துவ அலுவலர் வைஷ்ணவி, மகப்பேறு பிரிவு துறை தலைவர் கீதா தலைமையிலான மருத்துவ குழுவினர் அறுவை சிகிச்சை செய்தனர்.

இதில் ராணிக்கு ஒரே பிரசவத்தில் எடை குறைவாக 2 ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை பிறந்தன.

குழந்தைகளுக்கு செயற்கை சுவாசம் மூலம் நுரையீரல் வளர்ச்சிக்குரிய மருந்து ஆகிய உயர் சிகிச்சைகளை அளித்து வந்த மருத்துவ குழுவினர் குறைந்த எடை கொண்ட குழந்தைகளைப் பாதுகாப்பாக பராமரிக்கும் கங்காரு பராமரிப்பு முறையை மேற்கொண்டுள்ளனர்.

இதன் விளைவாக குழந்தைகளின் எடையை அதிகரித்ததாகவும், தற்போது தாயும் குழந்தைகளும் நலமுடன் வீடு திரும்பியதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது..

Tags:    

மேலும் செய்திகள்