Dindigul | Network Issue | `NO SIGNAL' - "அவசரம்-னா கூட முடியாது.." - கிராம மக்கள் கோரிக்கை
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பாலாறு பகுதியில் செல்போன்களுக்கு டவர் இல்லாமல் அவதியடைவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 500 குடும்பங்களுக்கும் மேல் வசிக்கும் இந்த கிராமத்தில் முன்னணி நிறுவனங்களின் சிக்னல் கூட கிடைப்பதில்லை என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் அவசர தேவைகளுக்கு உயரமான இடத்திற்கு சென்று செல்போன் பேச வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.