250 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் - உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் சிக்கியது
பதிவு: ஜூலை 14, 2018, 09:03 AM
கோவையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் சிக்கியது. வாகாரம் என்பவரின் குடோனில் போதைப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து குடோனில் போலீசார் ஆய்வு செய்தபோது 250 கிலோ குட்கா, பான்மசாலா ஆகியவை இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.