பழனி முருகன் கோவில் உற்சவர் சிலை - கும்பகோணம் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது

சிலை பாதுகாப்பு மையத்தில் வைக்க உத்தரவு

Update: 2018-07-12 07:58 GMT
கடந்த 2004-ஆம் ஆண்டில், பழனி முருகன்  கோவிலில் உற்சவர் சிலை செய்ததில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதனால், உற்சவர் சிலையை பழனி மலையில் இருந்து இழுவை ரயில் மூலம் கொண்டு வந்த கோயில் நிர்வாகிகள், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் நேற்று மாலை கும்பகோணம் நீதிமன்றத்திற்கு எடுத்து வந்தனர். 221 கிலோ 100 கிராம் எடை  கொண்ட அந்த சிலையின் எடை மற்றும் உயரத்தை  நீதிபதி அய்யப்பன் முன்னிலையில் பதிவு செய்தனர். இதையடுத்து,  கும்பகோணம் நாகேஸ்வரர் கோவிலில் உள்ள உலோக திருமேனி பாதுகாப்பு மையத்தில் சிலையை வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி, சிவாச்சாரியார் தீபாராதனையுடன், பாதுகாப்பு மையத்தில் சிலை கொ​ண்டு வைக்கப்பட்டது. சிலையை, ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் பார்வையிட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்