சிவகங்கையில் பாலியல் வன்கொடுமை செய்து சிறுமி கொலை - குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைப்பு
சிறுமி வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்ட நபர்கள், பாலியல் வன்கொடுமை செய்த பின், அடையாளம் காட்டி விடுவார் என்ற பயத்தில் கொலை செய்துள்ளனர்.;
சிவகங்கை மாவட்டம், கீழச்செவலப்பட்டி அருகே வாய்பேச முடியாத சிறுமி, வீட்டிற்குள் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அச்சரம்பட்டி என்ற இடத்தில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், சிறுமி வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்ட நபர்கள், பாலியல் வன்கொடுமை செய்த பின், அடையாளம் காட்டி விடுவார் என்ற பயத்தில் கொலை செய்துள்ளனர். தப்பியோடிய குற்றவாளிகளை, 3 தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.