ஆதரவற்றோர் காப்பகத்தை துவங்கிய நகராட்சி நிர்வாகம்

தமிழகத்திலேயே முதன்முதலாக நாகர்கோவில் நகராட்சி நிர்வாகம், தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து ஆதரவற்றோர் காப்பகததை நடத்தி வருகிறது.

Update: 2018-07-10 05:24 GMT
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆதரவற்றோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் மத்திய இணை  அமைச்சர் பொண் ராதாகிருஷ்ணன், நாகர்கோவில் நகராட்சியையும் சேவா பாரதி தன்னார்வ அமைப்பையும் இணைத்து புதியதாக ஒரு காப்பகத்தை துவங்கியுள்ளார். 

அபயகேந்திரம் என்ற பெயரில் செயல்பட்டு வரும் இந்த காப்பகத்தில் தற்போது, ஆதரவற்ற 15 பேர் வசித்து வருகின்றனர். பிள்ளைகளால் வீட்டை விட்டு துரத்திவிடப்பட்டோர், மற்றும் சொந்தங்கள் இலலாதோருக்கு இந்த காப்பகம் ஆதரவாக விளங்கி வருகிறது. இங்கு வாழும் முதியோர்கள் தங்களால் முடிந்த   வேலைகளை தாங்களே செய்துகொள்கிறார்கள்.
 
தங்க வைத்து உணவு கொடுத்து பார்த்துக்கொள்வதோடு மட்டுமின்றி, அவர்களை அவ்வப்போது சுற்றுலாவும் அழைத்துச்செல்கிறார்கள்..

Tags:    

மேலும் செய்திகள்