யூரோ கோப்பை கால்பந்து தொடர்: களத்தில் மயங்கி விழுந்த டென்மார்க் வீரர் - ரசிகர்கள் அதிர்ச்சி

யூரோ கால்பந்து போட்டியின்போது டென்மார்க் வீரர் எரிக்சன் களத்திலேயே மயங்கி விழுந்தது, ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2021-06-13 03:35 GMT
யூரோ கால்பந்து போட்டியின்போது டென்மார்க் வீரர் எரிக்சன் களத்திலேயே மயங்கி விழுந்தது, ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. யூரோ கால்பந்து தொடரில் டென்மார்க்  - பின்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி டென்மார்க் தலைநகர் கோபென்ஹகனில் நடந்தது. போட்டி நடந்து கொண்டிருந்தபோது, டென்மார்க் நடுக்கள ஆட்டக்காரர் கிரிஸ்டியன் எரிக்சன், திடீரென்று களத்திலேயே மயங்கி விழுந்தார். இதைப் பார்த்து சுற்றி இருந்த வீரர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், ஆட்டம் நிறுத்தப்பட்டு எரிக்சனுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்கள், எரிக்சன் நலம்பெற வேண்டும் என சமூக வலைதளங்களில் பதிவிடத் தொடங்கினர். இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எரிக்சனின் உடல்நிலை சீராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
==

Tags:    

மேலும் செய்திகள்