ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் - சாம்பியன் பட்டம் வென்றது செளராஷ்டிரா

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் செளராஷ்டிரா அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.;

Update: 2020-03-13 11:59 GMT
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில், செளராஷ்டிரா அணி, முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. ராஜ்காட்டில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பெங்கால் அணியும், செளராஷ்டிரா அணியும் மோதின. டாஸ் வென்று பேட் செய்த செளராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் 425 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்​கிய பெங்கால் அணி 381 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து 2வது இன்னிங்சில் களமிறங்கிய செளராஷ்டிரா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் எடுத்த நிலையில் போட்டி சமனில் முடிந்தது. இதனையடுத்து முதல் இன்னிங்சில் அதிக ரன்கள் பெற்றதால் செளராஷ்டிரா அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.   

Tags:    

மேலும் செய்திகள்