"தமிழக அரசு உதவ வேண்டும்"- சர்வதேச கராத்தே போட்டியில் தங்கம் வென்ற தஸ்நீம்

சர்வதேச கராத்தே போட்டியில் தங்கம் வென்ற 7 ஆம் வகுப்பு மாணவிக்கு திரை பிரபலங்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Update: 2019-05-28 06:50 GMT
சர்வதேச கராத்தே போட்டியில் தங்கம் வென்ற 7 ஆம் வகுப்பு மாணவிக்கு திரை பிரபலங்கள் பாராட்டு தெரிவித்தனர். நடன இயக்குனர் தீனாவின் மகள் தஸ்நீம், மலேசியாவில்  நடைபெற்ற சர்வதேச கராத்தே போட்டியில் தங்கப்பதக்கம் பெற்று தமிழகம் திரும்பியுள்ளார். இந்நிலையில், சென்னை தியாகராய நகரில் உள்ள நடன இயக்குனர்கள் சங்கத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட இயக்குனர் எழில், கௌதமன், பெப்ஸி விஜயன், நடிகர் ஹரிகுமார் உள்ளிட்டோர், தஸ்நீமை வாழ்த்திப் பேசினர். இதுகுறித்து தெரிவித்த தஸ்நீம், தான் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு தமிழக அரசு உதவ வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
Tags:    

மேலும் செய்திகள்