ஆகஸ்ட் மாதத்திற்கு 31 நாட்கள் ஏன் ? - இது ஒரு சுவாரசிய காரணம்!!

ஆங்கில காலண்டரில் ஒற்றைப்படை மாதங்களுக்கு 31 நாட்களும், இரட்டைப்படை மாதங்களுக்கு 30 நாட்களும் உள்ள நிலையில், இரட்டைப்படை ஆகஸ்ட் மாதத்திற்கு மட்டும் 31 நாள் அளிக்கப்பட்டதற்கு ஒரு சுவாரசியமான காரணம் உண்டு.

Update: 2021-08-01 11:08 GMT
ஆங்கில காலண்டரில் ஒற்றைப்படை மாதங்களுக்கு 31 நாட்களும், இரட்டைப்படை மாதங்களுக்கு 30 நாட்களும் உள்ள நிலையில், இரட்டைப்படை ஆகஸ்ட் மாதத்திற்கு மட்டும் 31 நாள் அளிக்கப்பட்டதற்கு ஒரு சுவாரசியமான காரணம் உண்டு. 

2000 வருடங்களுக்கு முன், பண்டைய ரோம சாம்ராஜியத்தின் பேரரசராக இருந்த ஜூலியஸ் சீஸர் உருவாக்கிய காலண்டர், ஜூலியன் காலண்டர் என்று அழைக்கப்படுகிறது. 16ஆம் நூற்றாண்டில் இதில் சற்று மாற்றம் செய்யப்பட்டு இன்று வரை உலகெங்கும் பின்பற்றப்படுகிறது.

ஜூலை மாதம் ஜூலியஸ் சீசரின் பெயரில் இருந்து உருவாக்கப்பட்டது. ஒற்றைப்படை மாதம் என்பதால் இதற்கு 31 நாட்கள் அளிக்கப்பட்டது.

BREATH.. பண்டைய ரோம சாம்ராஜியம், ஜூலியஸ் சீஸர், அகஸ்ட்ரஸ் சீஸர், காலண்டர் மாதங்கள்

ஜூலியஸ் சீஸர், ரோமானிய செனட் உறுப்பினர்களால் படுகொலை செய்யப்பட்ட பின், அவரின் மருமகன் அகஸ்டஸ் சீஸர், மன்னரானார். ஜுலியஸ் சீஸர் அளவுக்கு புகழும், வெற்றியும் பெற்ற அகஸ்டஸ் சீஸரின் பெயரில் இருந்து ஆகஸ்ட் மாதம் என, பெயரிடப்பட்டது.

ஆனால், இரட்டைப் படை மாதம் என்பதால், ஆகஸ்ட்டிற்கு 30 நாட்கள் தான் அளிக்கப்பட்டிருந்தது. தனது மாமன் ஜூலியஸ் சீஸரின் மாதமான ஜூலை மாதத்திற்கு இணையாக தனது ஆகஸ்ட் மாதத்திற்கும் 31 நாட்கள் இருக்க வேண்டும் என்று அகஸ்டஸ் சீஸர் விரும்பினார்.

எனவே பிப்ரவரியில் இருந்து ஒரு நாளை எடுத்து, ஆகஸ்டில் சேர்த்து, அதற்கு 31 நாட்களை அளித்தார்.

இதன் விளைவாக பிப்ரவரிக்கு 28 நாட்கள் மட்டும் உள்ளது.

ஜூலை சீஸர் மற்றும் அகஸ்டஸ் சீஸரின் பெயர்களை தாங்கிய ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் 2000 ஆண்டுகளாக அவர்களின் புகழை பரப்பி வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்