"இதுவரை ஒரு பைசா கூட ஒதுக்கப்படவில்லை" - டி.ஆர். பாலு பரபரப்பு குற்றச்சாட்டு

Update: 2024-02-03 02:20 GMT

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் உரையாற்றிய

தி.மு.க. மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு,

வெள்ள நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளுக்கு தமிழக அரசு 37 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்குமாறு கோரிய நிலையில், இதுவரை ஒரு பைசா கூட ஒதுக்கப்படவில்லை என குற்றம் சாட்டினார்.

அனைத்து கட்சி குழுவினருடன் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தபோது 27-ம் தேதிக்குள் வெள்ள நிவாரணம் வழங்கப்படும் என உறுதி அளித்ததாகவும், ஆனால் இன்று வரை எந்த விதமான நிதியும் விடுவிக்கப்படவில்லை - மத்திய அரசு தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதாகவும் குற்றம் சாட்டினார். 2019-ம் ஆண்டு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியதாகத் தெரிவித்த டி.ஆர்.பாலு, 5 ஆண்டுகள் ஆன பிறகும் இதுவரை ஒரு செங்கல்லை தவிர எந்த பணிகளும் நடைபெறவில்லை என்றும் தெரிவித்தார். அரசமைப்புச் சட்டத்தை மீறி செயல்படும் ஆளுநர்களை குடியரசுத் தலைவர் திரும்பப்பெற வேண்டுமென்றும், டி.ஆர்.பாலு வலியுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்