அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு - செண்டை மேளம் முழங்க வரவேற்பு

Update: 2024-04-07 05:33 GMT

பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் பொள்ளாச்சி சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்... வடசித்தூர், கொண்டம்பட்டி, அரசம் பாளையம், காரச்சேரி, பணப்பெட்டி, மெட்டு வாவி உள்ளிட்ட பல கிராமங்களில் இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்... அங்கு அவருக்கு பொதுமக்கள் சார்பில் செண்டை மேளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது... கார்த்திகேயனுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்... அவருடன் முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட அதிமுக, கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்