10 கி.மீ நடந்து சென்று உதவி வழங்கிய அமைச்சர் மா. சுப்பிரமணியன்

சுகாதரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சுமார்10 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று, கெடமலை கிராம மக்களுக்கு மருத்துவ உதவிகளை செய்தார்...;

Update: 2022-06-22 06:57 GMT

10 கி.மீ நடந்து சென்று உதவி வழங்கிய அமைச்சர் மா. சுப்பிரமணியன்

சுகாதரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சுமார்10 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று, கெடமலை கிராம மக்களுக்கு மருத்துவ உதவிகளை செய்தார். நாமக்கல் மாவட்டத்திலுள்ள கீழுர், மேலூர், கெடமலை கிராமங்களில் இல்லம் தேடி மருத்துவம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் நடந்து கெடமலைக்கு சென்று, அங்குள்ள கிராம மக்களுக்கு, மருத்துவர்கள் மூலம் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருத்துவ உதவிகளை வழங்கினார். மேலும் அப்போது நாமக்கல்லில் விரைவில் சித்த மருத்துவக்கல்லூரி தொடங்கப்படும் எனவும் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்