அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கு - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

Update: 2022-08-26 02:09 GMT

அதிமுக தலைமை அலுவலம் சூறையாடப்பட்டது தொடர்பாக பதிவான நான்கு வழக்குகளையும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான வழக்கு, நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது.


அப்போது, அதிமுக அலுவலகத்தில் நடந்த கலவரம், ஆவணங்கள் சூறை தொடர்பாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் பதிவான 4 வழக்குகளையும், சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளதாக கூறி, அந்த உத்தரவு நகல் அரசுத்தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.


இதை பதிவு செய்த நீதிபதி, வழக்குகள் தொடர்பான ஆவணங்களை சிபிசிஐடி வசம் ஒப்படைக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் 19ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்