ஜெயலலிதா மரண விவகாரம் - ஓ.பி.எஸ்., இளவரசி நாளை ஆஜர்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலாவின் உறவினர் இளவரசி ஆகியோர் நாளை ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளிக்க உள்ளனர்.;

Update: 2022-03-20 15:08 GMT
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலாவின் உறவினர் இளவரசி ஆகியோர் நாளை ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளிக்க உள்ளனர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம உள்ளதாக எழுந்த புகார்கள் மற்றும் கோரிக்கைகளின் அடிப்படையில், அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தின் விசாரணை 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. ஜெயலலிதாவின் உறவினர்கள், பாதுகாவலர்கள், மருத்துவர்கள், போயஸ் தோட்ட பணியாளர்கள் என இதுவரை சுமார் 154 பேரிடம் விசாரணை நடைபெற்று இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி ஆகியோர் நாளை ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகி தங்கள் தரப்பு வாக்குமூலங்களை பதிவு செய்ய உள்ளனர். இந்த விசாரணை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏற்கனவே 8 முறை சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் விசாரணை ஆணையத்தின் தரப்பில் சில முறை தள்ளி வைக்கப்பட்டதாலும், பல முறை ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் ஆஜராக முடியாத சூழலும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்