நகர்புற உள்ளாட்சி தேர்தல் - 3 ஆம் இடம் பிடித்த பாஜக

நகர்புற உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிட்ட முக்கிய கட்சிகளின் வாக்கு விகிதங்கள் பற்றி இந்தத் தொகுப்பு அலசுகிறது.;

Update: 2022-02-25 12:10 GMT
நகர்புற உள்ளாட்சி தேர்தல் - 3 ஆம் இடம் பிடித்த பாஜக நகர்புற உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிட்ட முக்கிய கட்சிகளின் வாக்கு விகிதங்கள் பற்றி இந்தத் தொகுப்பு அலசுகிறது. மாநகராட்சி தேர்தல்களில், 43.59 சதவீத வாக்குகளையும், நகராட்சி தேர்தல்களில் 43.49 சதவீத வாக்குகளையும், பேரூராட்சி தேர்தல்களில் 41.91 சதவீத வாக்குகளையும் திமுக பெற்று முதல் இடத்தில் உள்ளது. மாநகராட்சி தேர்தல்களில், 24 சதவீத வாக்குகளையும், நகராட்சி தேர்தல்களில் 26.86 சதவீத வாக்குகளையும், பேரூராட்சி தேர்தல்களில் 25.56 சதவீத வாக்குகளையும் அதிமுக பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. மாநகராட்சி தேர்தல்களில், 7.17 சதவீத வாக்குகளையும், நகராட்சி தேர்தல்களில் 3.31 சதவீத வாக்குகளையும், பேரூராட்சி தேர்தல்களில் 4.30 சதவீத வாக்குகளையும் பாஜக பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது. மாநகராட்சி தேர்தல்களில், 3.16 சதவீத வாக்குகளையும், நகராட்சி தேர்தல்களில் 3.04 சதவீத வாக்குகளையும், பேரூராட்சி தேர்தல்களில் 3.85 சதவீத வாக்குகளையும் காங்கிரஸ் பெற்று நான்காவது இடத்தில் உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்