சசிகலா, இளவரசி சொத்துக்கள் அரசுடைமை - திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனின் சொத்துக்கள் அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளது.;
சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனின் சொத்துக்கள் அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளது.சொத்து வழக்கில், கடந்த 2017ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பின் அடிப்படையில், சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனின் சொத்துக்கள் அரசுடைமை ஆக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, திருவாரூர் மாவட்டம் வண்டாம்பாளை மற்றும் அதன் அருகில் உள்ள 7 சொத்துக்கள் அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். சொத்து வழக்கில் சிறை தண்டனை முடிந்து சசிகலா மற்றும் இளவரசி விடுதலை ஆகியுள்ள நிலையில், தற்போது அவர்களது சொத்துக்கள் அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளது.
--