"மடிக்கணினி வழங்கும் திட்டத்தில் முறைகேடு" - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தில் ஆயிரத்து 921 கோடி முறைகேடு நடந்திருப்பதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

Update: 2021-01-09 12:46 GMT
சீன நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டு, மாணவர்களுக்கு தரமற்ற, செயல் திறன் குறைந்த மடிக்கணினி வழங்கப்பட்டிருப்பதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.சீன நிறுவனத்திற்கு உதவி செய்ய வேண்டுமென்ற உள்நோக்கத்துடன் அமைச்சர், அதிகாரிகள் இந்த விவகாரத்தில் செயல்பட்டிருப்பதாக தெரிவித்துள்ள ஸ்டாலின்,இதன் மூலம் சீன நிறுவனம் அடைந்த சட்டவிரோத லாபம் மட்டும் 469 கோடி ரூபாய் என்பது அம்பலமாகியிருப்பதாக கூறியுள்ளார்.சம்பந்தப்பட்ட சீன நிறுவனத்தை எவ்வித தயக்கமும் இன்றி "பிளாக் லிஸ்ட்" செய்து,தரக்குறைவான மடிக்கணினி வழங்கியதற்காகப் பெருந்தொகையினை அபராதமாக அந்த நிறுவனத்திடமிருந்து வசூலிக்க உத்தரவிட வேண்டும் என தி.மு.க தலைவர் வலியுறுத்தியுள்ளார்.மேலும், அந்த நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய 456 கோடி ரூபாயை நிறுத்தி வைக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்