பிரணாப் முகர்ஜி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் - டெல்லி ராணுவ மருத்துவமனை மருத்துவர்கள் தகவல்

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக டெல்லி ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

Update: 2020-08-12 03:48 GMT
மூளையில் கட்டி இருந்ததை அடுத்து பிரணாப் முகர்ஜிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் சிகிச்சைக்குப்பின் அவரது உடல்நிலை மோசம் அடைந்ததாகவும் ராணுவ மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டதாகவும் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ள மருத்துவமனை அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. அறுவைசிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையில் பிரணாப்புக்கு ஏற்பட்ட கொரோனா தொற்றால் உடல்நிலை மோசமடைந்துள்ளது என்றும் ராணுவ மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்