கேரளாவை அதிர வைத்த தங்க கடத்தல் விவகாரம் - பிரதமர் மோடிக்கு கேரள முதலமைச்சர் கடிதம்

கேரளாவை அதிர வைத்துள்ள தங்க கடத்தல் விவகாரத்தில் பாஜகவைச் சேர்ந்த சந்திப் நாயருக்கு முக்கிய பங்கு இருப்பதாக சுங்கத்துறை தரப்பு தெரிவித்திருப்பது அடுத்த கட்ட பரபரப்பை பற்றவைத்துள்ளது.

Update: 2020-07-09 10:26 GMT
* கேரளாவை அதிர வைத்துள்ள தங்க கடத்தல்  விவகாரத்தில் பாஜகவைச் சேர்ந்த சந்திப் நாயருக்கு முக்கிய பங்கு இருப்பதாக சுங்கத்துறை தரப்பு தெரிவித்திருப்பது அடுத்த கட்ட பரபரப்பை பற்றவைத்துள்ளது.  

* திருவனந்தபுரத்தில் உள்ள அமீரக நாட்டின் தூதரகத்திற்கு பார்சல் வருவது வழக்கமாக இருந்துள்ளது. இந்த பார்சலை ஸரித் என்பவர் எடுத்து சென்றுள்ளார். 

* மற்றொரு நாட்டின் தூதரகத்திற்கு வரும் பார்சல்களை சுங்கத்துறையினர் வழக்கமாக சோதனையிடுவதில்லை. ஆனால், அமீரக நாட்டின் தூதரகத்திற்கு வரும் பார்சல்களில் தங்கம் கடத்துவதாக தகவல் கசிந்தது.

* இதை தொடர்ந்து, வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் சிறப்பு அனுமதி பெற்ற சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பார்சலை சோதனை செய்தபோது அதிர்ச்சி காத்திருந்தது.  

* அந்த பார்சலில் 15 கோடி ரூபாய் மதிப்பிலான 30 கிலோ தங்கம் இருந்தது.  

* திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரகப் பெயரைப் பயன்படுத்தி தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* இந்த கடத்தலில் கேரள அரசின் தகவல் தொடர்புத் துறையில் மேலாளராக பணியாற்றும் ஸ்வப்னா சுரேஷ்க்கு தொடர்பு இருப்பது உறுதியானது. 

* இதையடுத்து, ஸ்வப்னா சுரேஷ் வீட்டில் சுமார் ஆறு மணி நேரம் சோதனை நடத்திய அதிகாரிகள், முக்கிய ஆவணங்களை கைப்பற்றி தீவிர விசாரணையில் இறங்கினர். 

* இந்த கடத்தலில் பாஜகவைச் சேர்ந்த சந்திப் நாயருக்கு முக்கிய பங்கு இருப்பதாக சுங்கத்துறை தரப்பு தெரிவித்தது.  

* இந்த விவகாரத்தில், சரத் என்பவரை, கைது செய்துள்ள சுங்கத்துறையினர், அவரை  7 நாள்  காவலில் எடுத்து விசாரிக்க முடிவு  செய்துள்ளனர். 

* தங்க கடத்தல் வழக்கில் முதல்வர் அலுவலகத்துக்கு தொடர்பு இருப்பதால், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க ஒருமித்த குரல் எழுப்பியுள்ளன. 

* இதற்கிடையே, கேரள முதலமைச்சர்  பினராயி விஜயனின் முதன்மை செயலர் சிவசங்கரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. 

* இந்த விவகாரத்தில் விசாரணையை எதிர்கொள்ள தயார் என தெரிவித்துள்ள கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், சிபிஐ விசாரணை கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்