"அசாம் மாநிலத்துக்கு அனைத்து உதவிகளும் அளிக்கப்படும்" - அசாம் முதல்வருக்கு தொலைபேசியில் நம்பிக்கை அளித்த பிரதமர்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அசாம் மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் அளிக்கப்படும் என பிரதமர் மோடி நம்பிக்கை அளித்துள்ளார்.;
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அசாம் மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் அளிக்கப்படும் என பிரதமர் மோடி நம்பிக்கை அளித்துள்ளார். இதுகுறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், அசாம் மாநிலத்தில் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளம் நிலச்சரிவு குறித்து அம்மாநில முதல்வருடன் கேட்டறிந்ததாக தெரிவித்துள்ளார். அசாம் மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் அளிக்கப்படும் என்றும் தனது பதிவில் மோடி குறிப்பிட்டுள்ளார்.