"கொள்முதல் நிலையங்களில் மழையில் நனைந்த நெல் மூட்டைகள் : விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை அளிக்க வேண்டும்" - ஜி.கே.வாசன் கோரிக்கை
"விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை அளிக்க வேண்டும்"- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை;
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த நெல்மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒழுங்குமுறை விற்பனை மையங்களில் வைக்கப்பட்டிருந்த சுமார் 30 ஆயிரம் நெல் மூட்டைகள் நேற்று பெய்த மழையில் நனைந்து சேதமடைந்துள்ளன. இந்த நிலையில், விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் கோரிக்கை விடுத்துள்ளார். அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களிலும் முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும், நெல் மூட்டைகளை உரிய நேரத்தில் கொள்முதல் செய்ய வேண்டும் என ஜி.கே.வாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.