"கேரளாவில் மேலும் 19 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு" - முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்
கேரளாவில் மேலும் 19 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.;
கேரளாவில் மேலும் 19 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த, 9 பேரும் காசர்கோட்டை சேர்ந்த 3 பேரும், மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 3 பேரும் திருச்சூரில் 2 பேரும் இடுக்கி மற்றும் வயநாட்டில் தலா ஒருவரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இதன் மூலம் கேரளாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 138 ஆக உயர்ந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.