புதுச்சேரியில் குடியரசு தின விழா உற்சாகம் - தேசியக்கொடி ஏற்றி வைத்த துணைநிலை ஆளுநர்

புதுச்சேரியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, தேசியக்கொடி ஏற்றி வைத்தார். பல்வேறு சாதனைகள் படைத்த காவல்துறையினருக்கு பதக்கம் வழங்கி கெளரவித்தார்.

Update: 2020-01-26 10:07 GMT
புதுச்சேரியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, தேசியக்கொடி ஏற்றி வைத்தார். பல்வேறு சாதனைகள் படைத்த காவல்துறையினருக்கு பதக்கம் வழங்கி கெளரவித்தார். இந்த நிகழ்ச்சியில், முதலமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் சிவகொழுந்து, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயலர், அரசு செயலர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். முன்னதாக குடியரசு தின உரை நிகழ்த்திய துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, புதுச்சேரியில் முதல் முறையாக உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு மானியம் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார். அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள், பதவி உயர்வு மற்றும் நேரடி நியமனங்கள் மூலம் உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கிரண்பேடி கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்