17வது மக்களவையின் சபாநாயகர் ஆனார் ஓம் பிர்லா

17 வது மக்களவையின் சபாநாயகராக ஓம் பிர்லா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

Update: 2019-06-19 08:18 GMT
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா தொகுதியில் இருந்து 3 முறை பாஜக எம்எல்ஏ ஆகவும், 2 முறை எம்.பி.யாகவும் தேர்வு செய்யப்பட்டவர் ஓம் பிர்லா. அவரை மக்களவையின் சபாநாயகராக நியமிக்கும் தீர்மானத்தை பிரதமர் மோடி முன்மொழிந்தார். ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிதின்கட்கரி, டிஆர் பாலு, அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் உள்ளிட்டோர்  வழிமொழிந்தனர். 

ஓம் பிர்லாவை ஆதரித்த எதிர்க்கட்சிகள்

காங்கிரஸ், திரிணாமுல், திமுக மற்றும் பிஜூ ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும், ஓம் பிர்லாவுக்கு ஆதரவு தெரிவித்ததை தொடர்ந்து அவர், மக்களவையின் சபாநாயகராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, அவரை பிரதமர் மோடி உள்ளிட்டோர் அழைத்து சென்று சபாநாயகர் இருக்கையில் அமரவைத்தனர்.  

"ஓம் பிர்லாவின் வாழ்க்கை சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்டது" - பிரதமர் மோடி புகழாரம்

மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஓம் பிர்லாவின் வாழ்க்கை சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்டது என பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார். மக்களவையில் பேசிய பிரதமர் மோடி, புதிய சபாநாயகருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக கூறினார். ராஜஸ்தானின் ஒரு சிறிய கிராமமான கோட்டாவை தனது கடினமான உழைப்பால் ஒரு குட்டி இந்தியாவாக மாற்றியவர் ஓம் பிர்லா என்றார். கோட்டா தொகுதியில் ஒருவர் கூட பசியுடன் உறங்கச் செல்லக்கூடாது என்பதே ஓம் பிர்லாவின் நோக்கமாக இருந்ததாகவும், மக்களை மையமாக வைத்து அவருடைய அரசியல் செயல்பாடு இருந்தது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். குஜராத்தில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டபோது கூட்ச் மாவட்டத்திலேயே தங்கிய ஓம் பிர்லா, மக்களுக்காக கடுமையாக பணியாற்றியதை யாரும் மறக்க முடியாது என்றும் பிரதமர் மோடி பேசினார். 
Tags:    

மேலும் செய்திகள்