அன்புமணிக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி வழங்க கூடாது - நடிகர் ஆனந்தராஜ்

ராஜ்யசபா எம்.பி. பதவியை அதிமுக பயன்படுத்திக்கொள்ள வேண்டும், அன்புமணிக்கு வழங்கக் கூடாது என நடிகர் ஆனந்தராஜ் தெரிவித்துள்ளார்.;

Update: 2019-05-27 10:46 GMT
தமது அரசியல் பயணம் குறித்து விரைவில் அறிவிப்பேன்  என  நடிகர் ஆனந்தராஜ் கூறியுள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக, தமது தோல்வி குறித்து ஆராய வேண்டும் என்றார். கமல்ஹாசன் கணிசமான வாக்குகள் பெற்றது குறித்த கேள்விக்கு, அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதாக தெரிவித்தார். தற்போது வரை தான் அதிமுகவில் உள்ளதாக குறிப்பிட்ட ஆனந்தராஜ், ராஜ்யசபா எம்.பி. பதவியை அதிமுக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அன்புமணிக்கு வழங்கக் கூடாது என்றும் கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்