சாத்தான்குளம் அருகே உள்ள தச்சமொழி கிராம மக்கள், பொய் வழக்குகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த பகுதியில் அமைந்துள்ள சுடுகாட்டு நிலத்தை, தங்களுக்கு சொந்தமானது என சுவாமிதாஸ் அகஸ்டின், ஞானசேகரன் ரவீந்திரன் ஆகியோர் போலீசாரிடம் பொய் புகார்களை அளித்ததாக குற்றச்சாட்டினர். இதையடுத்து, உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.