"தேசிய அளவில் 3வது அணி உருவாகும்" - கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் தலைவர்

இந்தியாவில் மூன்றாவது அணி வருவதற்கான வாய்ப்பிருப்பதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.;

Update: 2019-04-08 11:39 GMT
இந்தியாவில் மூன்றாவது அணி வருவதற்கான வாய்ப்பிருப்பதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். கோவையில் உள்ள உணவகம் ஒன்றில் செய்தியாளர்களிடம் இவ்வாறு பேசினார். கோவை மக்களவை தொகுதிக்காக தனி தேர்தல் அறிக்கை வெளியிட்ட அவர், தேசிய அளவில் 3 வது அணி நிச்சயம் உருவாகும் என்றார். தமிழகத்தை முன்னிறுத்துவதே தமது பணி என்றும், ஒவ்வொரு மாநிலம் அவ்வாறு புறப்பட்டால், புதிய பிரதமர் கிடைப்பார் என்றும் கமல்ஹாசன் கூறினார். மாநிலங்கள் முன்னிறுத்தப்பட்டால், துப்பாக்சிச் சூடு சம்பவங்கள் நடக்காது என்றார்.  கண் கூசும் அளவுக்கு டார்ச் லைட்டின் வெளிச்சம் இருக்கும் என்றும் அவர் கூறினார்.  
Tags:    

மேலும் செய்திகள்