தேமுதிகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணியில் இணைவதற்காக தே.மு.தி.க. உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.;
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணியில் இணைவதற்காக தே.மு.தி.க. உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், இரண்டு நாளில் முடிவு தெரியும் என, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவை, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், மதுரை விமானநிலையத்தில், இன்று மீண்டும் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, துணை முதலமைச்சர், அமித்ஷா உடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என தெரிவித்தார்.