கர்நாடக காங்., சட்டமன்றக்குழு கூட்டம் : பெங்களூருவில் மாலை 3 மணிக்கு கூடுகிறது

அரசியல் பரபரப்பு நிலவி வந்த கர்நாடகாவில், காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது.

Update: 2019-01-18 08:15 GMT
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் சிலர் பாஜகவுக்கு செல்வதாக ஏற்பட்ட பரபரப்பு சற்று அடங்கி உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு கூட்டம்  இன்று நடைபெறுகிறது. பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த கூட்டத்தில், காங்கிரஸ்  உறுப்பினர்கள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்றும், பங்கேற்காதவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட ரமேஷ் ஜார்கிஹோலி மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் நேரடியாகவே காங்கிரசுக்கு தங்களது அதிருப்தியை தெரிவித்து இருந்தனர். இதுவரை நடந்த ஒரு அமைச்சரவை கூட்டத்தில் கூட ரமேஷ் ஜார்கிஹோலி பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

மேலும் செய்திகள்