திமுகவில் இணைந்தார் செந்தில் பாலாஜி...

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்துள்ளார்.

Update: 2018-12-14 07:56 GMT
செந்தில் பாலாஜி, தினகரனின் அமமுகவில் மாநில அமைப்பு செயலாளராக இருந்தார்.  அக்கட்சியின் துணை பொதுச் செயலாளரான தினகரன் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, அவர் திமுகவில் இணையப்போவதாக ஏற்கனவே தகவல் பரவியது. அதனை உண்மையாக்கும் விதமாக இன்று செந்தில் பாலாஜி, தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். காலை 12 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் வந்த செந்தில் பாலாஜி, ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவருடன்  அவரது ஆதரவாளர்களும் திமுகவில் இணைந்தனர். திமுகவில் சேர்ந்துள்ள செந்தில் பாலாஜி, ஏற்கன்வே அக்கட்சியில் இருந்து அதிமுகவிற்கு சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

"ஸ்டாலின் மீதான ஈர்ப்பால் திமுகவில் இணைந்தேன்"

ஸ்டாலினுடனான சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்கள் மத்தியில் பேசிய செந்தில் பாலாஜி, ஸ்டாலின் மீது ஏற்பட்ட ஈர்ப்பால் திமுகவில் இணைந்ததாக கூறினார். கடந்த ஒரு மாத காலமாக, அமமுக நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை என்று தெரிவித்த செந்தில் பாலாஜி, 18 எம்.எல்.ஏக்களில் தீர்ப்பு வெளியான போது, மேல்முறையீடு செய்ய வேண்டாம்... தேர்தலை சந்திக்கலாம் என்று கூறியது தான் தான் எனவும் செந்தில் பாலாஜி தெரிவித்தார். 

திமுகவில் இணைந்தார் செந்தில் பாலாஜி - பத்திரிகையாளர் ஷியாம் கருத்து


திமுகவில் இணைந்தார் செந்தில் பாலாஜி - வைகை செல்வன் கருத்து 


திமுகவில் இணைந்தார் செந்தில் பாலாஜி - பத்திரிகையாளர் மாலன் கருத்து


திமுகவில் இணைந்தார் செந்தில் பாலாஜி - பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன் கருத்து


 


Tags:    

மேலும் செய்திகள்