இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முற்பட்டதாக வழக்கு : டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் தினகரன் ஆஜர்

இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முற்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில், டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன் இன்று ஆஜரானார்.;

Update: 2018-12-04 06:54 GMT
இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முற்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில், டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன் இன்று ஆஜரானார். இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றுவதற்காக தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க தினகரன் முற்பட்டதாக, அவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்திற்கு வந்த தினகரன், வழக்கு தொடர்பான ஆவணங்களில் கையெழுத்திட்டார். இதையடுத்து, வழக்கின் விசாரணை வரும் 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்