ஸ்டாலினுடன் மாற்றுத் திறனாளிகள் சந்திப்பு - நலத்திட்ட உதவிகள் வழங்கி ஸ்டாலின் வாழ்த்து
சர்வதேச மாற்று திறனாளிகள் தினத்தையொட்டி பல்வேறு மாற்று திறனாளிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது மாற்றுதிறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஸ்டாலின் வழங்கினார். பின்னர் அனைவருடனும் அவர் புகைப்படம் எடுத்து கொண்டார்.